சட்டத்தில் மாற்றங்கள் - பெண்களுக்கு கருக்கலைப்பை எளிதாக்கும்
கல்யாணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்வதற்கான மாற்றங்களை சட்டத்தில் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது.
புது டெல்லி: மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒரு முக்கியமான சட்டத்தில் மாற்றங்களை நிறைவேற்ற உள்ளது. அதாவது கர்ப்பம் தொடர்பான மருத்துவ பணி சட்டத்தில் மாற்றங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரிக்க வாய்ப்புள்ளது. இதன் வரைவு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்டுள்ளது. கருத்தடை நடவடிக்கைகள் முழுமையாக செயல்படாததால், கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் வகையில் இந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம். இதில் சிறப்பு என்னவென்றால், இது திருமணமாகாத பெண்களுக்கும் செல்லுபடியாகும். இந்த சட்ட மாற்றத்தால் தனி ஒரு பெண் பாதுகாப்பாக தேவையற்றதாக நினைக்கும் கர்ப்பத்தை கலைப்பதை எளிதாக்கும்.
திருமணமான பெண்களுக்கு இப்போது ஒரு சட்டம் உள்ளது:
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ், கருத்தடை அல்லது தேவையற்ற கர்ப்பம் என்பது திருமணமான பெண்களின் விஷயத்தில் மட்டுமே கருக்கலைப்பு செய்வவது சட்டப்பூர்வமாக கருதப்படுகிறது. சட்டத்தின் படி, பெற்றோர்கள் மைனர் சிறுமிகளுக்கு கருவை கலைக்க வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடம் இல்லை.
கருக்கலைப்புக்கான கலாம் 20 வாரங்களிலிருந்து அதிகரிக்கப்படும்:
இது தவிர, இந்த புதிய சட்டத்தில் கர்ப்பத்தை கலைப்பதற்கான காலம் 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்தும் திட்டமும் உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் மாற்றுத்திறனாளி மற்றும் கல்யாணம் ஆகாத பெண்களும் அடங்குவர். இது தவிர, கருவில் ஏதேனும் அசாதாரணம் இருந்தால், கருவுற்ற 20 வாரங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கருக்கலைப்பை அனுமதிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள சட்டத்தில் அதை 20 வாரங்களுக்குள் மட்டுமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணம் ஆகாத பெண்களும் நிவாரணம்:
சட்டத்தின்படி, கற்பழிப்பு காரணமாக கர்ப்பம் உண்டாகி, தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, குழந்தை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பலவீனமடைகிறது என்றால் கர்ப்பத்தை 20 வாரங்களுக்குள் கலைத்து விடலாம். திருமணமாகாத பெண்களை அரசாங்கம் சட்டத்தில் சேர்ப்பது என்பது, பெண்களின் பாலியல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றங்களை குறைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.