செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்த ராதாரவி, கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் இணைந்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். 


இந்நிலையில், தற்போது புதிய திருப்பமாக நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்து 6 மாதமே ஆன நிலையில் இப்போது அந்த கட்சியில் இருந்தும் விலகிய ராதாரவி, இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தனனை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.



இந்த சம்பவம் தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், பலரின் வாய்க்கும் நொறுக்குத்தீணி போட்டுள்ளது.