சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்....
சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு... நக்சலைட் அச்சுறுத்தலால் பாதுகாப்பு தீவிரம்....
சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு... நக்சலைட் அச்சுறுத்தலால் பாதுகாப்பு தீவிரம்....
சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டசபைக்கு நவம்பர் 12 (நாளை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கும் இலையில் நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நக்சலைட் ஆதிக்கம் மிக்க பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் குறைந்தது எட்டு தொகுதிகள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகளாக கருதப்படுகிறது. இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அலுவலர்கள் நக்சல்களின் சாலை வழி தாக்குதலுக்கு அஞ்சி, ஹெலிகாப்டர்களில் வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகள் அதிகமுள்ள கிராமங்களுக்கு சென்ற துணை ராணுவப் படையினர் முகாம்கள் அமைத்து நக்சலைட்டுகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளிக்க வேண்டாம் என்று வீடு வீடாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.