Chhattisgarh Election Results: பாஜக வென்றால்... யார் அடுத்த முதல்வர்?
Chhattisgarh Election Results 2023 Live: சத்தீஸ்கரில், பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்? முதல்வர் போட்டியில் இருக்கும் பாஜக தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் 2023: சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப் படி, பாஜக கட்சி 53 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே சமயம் காங்கிரஸ் 36 இடங்களில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான ரமன் சிங் இந்த விவகாரம் குறித்து தெளிவாகத் தெரிவித்துள்ளார், தேர்தல் அவரது கீழ் அல்ல, கூட்டுத் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், ரமன் சிங்கே இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக நம்பப்படுகிறது. பிரதமர் மோடியின் உத்தரவாதங்களை பொதுமக்கள் நம்புவதாகவும், பூபேஷ் பாகலின் வாக்குறுதிகளை நம்பவில்லை என்றும் முன்னாள் முதல்வர் கூறினார். முதல் கட்டத்தின் போக்கில் இது தெளிவாகத் தெரியும்.
பதான் தொகுதியில் முதல்வர் பூபேஷ் பாகல் நிலை என்ன:
இதற்கிடையில், பதான் தொகுதியில் மும்முனை போட்டி நிகழ்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி பூபேஷ் பாகலுடன் (Congress) பாஜக வேட்பாளரும் பாகலின் மருமகனான விஜய் பாகல் போட்டியிட்டுள்ளார். அதோடு மாநில கட்சியான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (J) எனும் கட்சியின் தலைவர் அமித் ஜோகியும் போட்டியிட்டுள்ளார்.
நான்கு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் முதல்வர் பூபேஷ் பாகல் (CM Bhupesh Baghel) பதான் தொகுதியில் 21567 வாக்குகள் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜய் பாகல் (Vijay Baghel) 164 வாக்குகள் பின்தங்கி 21403 வாக்குகள் பெற்றுள்ளார்.
பாஜக முன்னிலை:
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் (Chhattisgarh Election Results 2023 Updates) 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் அடுத்த முதல்வர் யார்?
சத்தீஸ்கரின் முதல்வர் முகம் பற்றி பேசுகையில், காங்கிரஸ் வெற்றி பெற்றால் பூபேஷ் பாகலை முதல்வராக்கலாம். இருப்பினும், டிஎஸ் சிங்தேவ் மீதும் சந்தேகம் உள்ளது. அதே சமயம், பா.ஜ., குறித்த நிலமை தெரியவில்லை. பிரதமர் மோடியை தனது முக்கிய முகமாக கொண்டு அக்கட்சி மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட்டது. அக்கட்சி வெற்றி பெற்றால், ராமன் சிங் முதல்வராகும் வாய்ப்பு அதிகம் என நம்பப்படுகிறது.
சத்தீஸ்கரில் காங்கிரஸை வீழ்த்திவிட்டு பாஜக (BJP) வெற்றி பெற்று வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ரமான் சிங் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் மக்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் காட்டியுள்ளனர். இதன் மூலம் பூபேஷ் பாகலின் வாக்குறுதிகளை மக்கள் ஏற்கவில்லை. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ