புதுடெல்லி: சத்திஷ்கார் மாநிலத்தில் 16 பெண்களை போலீசார் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஷ்கார் மாநில போலீசார் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த  2016-ம் ஆண்டில் சதீஷ்கர் மாநில போலீசார் பல்வேறு சம்பவங்களின் போது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மாநிலத்தில் போலீசாரால் 16 பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் ரீதியிலான தாக்குதலை எதிர்க்கொண்டு உள்ளனர். பெண்களை போலீசார் தாக்கிஉள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


மேலும் இதுபோன்ற கொடூரங்களை எதிர்க்கொண்ட 20 பெண்களிடம் வாக்குமூலம் பெற வேண்டியது உள்ளது என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. 


பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறையை எதிர்க்கொண்ட பெண்களுக்கு ரூ. 37 லட்சம் இடைக்கால நிதிஉதவி வழங்க மாநில அரசு பரிந்துரை செய்யக்கூடாது எனவும் மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.


பாதிக்கப்பட்டவர்களில் 8 பெண்களுக்கு தலா ரூ.3 லட்சமும், மற்ற 6 பெண்களுக்கு தலா ரூ.2 லட்சமும், போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த 2 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.


பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக பல்வேறு சம்பவங்களில் மாநில போலீசாரும் குற்றச் செயலில் ஈடுபட்ட போலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 


பாதிக்கப்பட்ட பெண்களிடம் மனித உரிமை கமிஷன் பிரதிநிதிகள் நேரில் விசாரணை நடத்தி அவர்களது வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் மனித உரிமை கமிஷனும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்டு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 


சத்திஷ்கார் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள 5 கிராம பெண்கள், போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர், வன்முறையை பிரயோக்கின்றனர் மற்றும் இரு பெண்கள் போலீசாரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று குற்றம் சாட்டினர். இதனையடுத்தே விசாரணையை தொடங்கினோம் என்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்து உள்ளது.