பூங்காவிலும் தொழுகை நடத்த அனுமதி இல்லை: யோகி ஆதித்யநாத் அரசு
பொது இடங்களில் தொழுகை நடத்த தடைக்கு பிறகு, தற்போது பூங்காவிலும் தொழுகை தடை விதித்துள்ளது உத்திரபிரதேச அரசு
உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை விதித்து பைஸ் அந்நிறுவனம் உத்தரவு ஒன்றை வெளியிட்டது. நொய்டா செக்டார் 58 பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என காவல் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன் அறிக்கையில், மசூதி, தர்ஹாக்கள் தவிர பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால் அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு. தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளை பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது. அதனால் அப்பகுதி நிறுவனங்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள், அங்கு தொழுகை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் தொழுகை நடத்த தடைக்கு பிறகு, தற்போது பூங்காவிலும் தொழுகை மற்றும் மத நடவடிக்கைகளை மேற்க்கோள போலீஸ் தடை விதித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பூங்காவில் தொழுகைகள் நடத்தப்படுவது வழக்கம். இதனால் பூங்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது