அருணாசலப் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் 34 ஆம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அங்கு தொழிற்சாலைகள், சாலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமித்ஷா அங்கு தொடங்கி வைத்தார். 


இந்த பயணம் குறித்து, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் (Geng Shuang), 


அருணாசலப் பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியை சீன அரசு அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி திபெத்தின் தென்பகுதி என்பதில் சீனா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது. அருணாசல பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் செல்வது சீன இறையான்மைக்கு எதிரானது. எல்லையில் நிலவும் ஸ்திரதன்மை, இருநாடுகளிடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கையை பாதிக்கும் செயல். இந்த செயலானது இருநாடுகளின் ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை ஆகும். என்று அவர் குற்றம்சாட்டினார்.