குடியுரிமை சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிமல்லாத பிற மதங்களை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த, ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய மதத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகள் தங்கியிருந்தால், அவர்களிடம் முறையான ஆவணம் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என திருத்தம் மேற்கொண்டது மத்திய அரசு. இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது வடகிழக்கு மாநிலங்களில் முழுக்கடையடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்ட மசோதாவில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் எதிர்க்கட்சிகள்.


ஆனால் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை மீறி மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை  நிறைவேற்றியது.