குடியுரிமை அளிப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்து, சீக்கியர், பவுத்தர், சமணர், பார்சி, கிறித்தவர் ஆகியோர் 12ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்தால் குடியுரிமை வழங்கலாம் என 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆறாண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கொண்டுவந்தார்.


இதைக் கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். மசோதா குறித்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குடியுரிமைச் சட்டத் திருத்தம் அசாமுக்கு மட்டுமானதல்ல நாடு முழுவதற்குமானது எனத் தெரிவித்தார்.


அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினர் அமைதியாக வாழ வேண்டுமென்ற விருப்பம் நிறைவேறாததால் இந்த மசோதாவைக் கொண்டுவர வேண்டியதாகிவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்துப் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


இதையடுத்து, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் மாநிலங்களவையில் தாக்கல் சிவதும் முக்கியம். இந்நிலையில், அண்டை நாடுகளில் இருந்து வந்த மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை அளிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் தாக்கல் இன்று தாக்கல் செய்து விவாதிக்க உள்ளது. இந்த விவாதத்தில் எதிர்கட்சிகள் பாரும் அமளியை ஏற்படுத்த காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....