ரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து துறை, டிசம்பர் இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விமானப் பயணம் கோவிட்-க்கு முந்தைய நிலையில் இருந்த இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"மே 25 - முழுமையான லாக்டவுன் (Lockdown) அறிவிக்கப்பட்ட 2 மாதங்கள் மற்றும் 2 நாட்களுக்குப் பிறகு - ஒரு நாளைக்கு 30,000 பயணிகளுடன் நாம் சிவில் விமானப் போக்குவரத்தை தொடங்கினோம். இரண்டு நாட்களுக்கு முன்பு, தீபாவளிக்கு சற்று முன்பு, 2.25 லட்சம் பேர் விமானத்தின் பயணித்தனர்" என்று சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep SIngh Puri) கூறினார்.


நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி விவகாரங்களின் துறை அமைச்சராகவும் உள்ள பூரி, தற்போது  சிவில் விமான போக்குவரத்து 70 சதவீதம் என்ற அளவில் இயங்குகிறது என்று கூறினார். 


டிசம்பர் 31 க்குள், அல்லது விரைவில் (ஜனவரி மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், விமான போக்குவரத்து துறை கோவிட்-க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.


சிவில் விமானப் போக்குவரத்து முழுமையாக இயங்கும்போது, ​​தற்போதுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் என்றும் பூரி கூறினார். "தற்போதுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளவும் பலப்படுத்தவும் தேவை உள்ளது. அதை கருத்தில் கொண்டு நிறிமுறைகளை மாற்றியமைக்கிறோம்.நெறிமுறைகளை அமைப்பதற்கு தொழில் வல்லுநர்கள் கலந்தாலோசிக்கப்படுகிறார்கள். மேலும் மக்களும் இதற்கு முழுமையாக ஒத்துழைத்து, சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விமானத் துறையின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். 


ALSO READ | வெள்ளை மாளிகையில் நிரந்தர வேந்தன் நான் தான் என்கிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR