புதுடெல்லி: பிரபல விமான உற்பத்தி நிறுவனமான Airbus, தனது தொழிற்சாலையினை இந்தியாவில் துவங்கவேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அழைப்பு விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ஏர் பஸ் நிறுவனம் இந்தியாவில் விமானங்களை தயாரிப்பதற்கு முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் இந்தியாவில் தற்போது விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இந்த புதிய தொழிற்சாலையால் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் எனவும் அவர் குறிப்பபிட்டுள்ளார்.


அரசு முறை பயணமாக பிரான்ஸுக்கு சென்றிருக்கும் சுரேஷ் பிரபு, பிரான்ஸின் டௌலோஸ் நகரில் அமைந்திருக்கும் ஏர்பஸ் ஆலை சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது இத்திட்டத்தினை குறித்து அவர் தெரிவித்துள்ளார். இதற்காக நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகளை சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய விமான சேவை நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில் இதுவரை Airbus நிறுவனமானது 300 விமானங்களை தயாரித்து வழங்கியுள்ளது. அதேவேலையில் 530 விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


இந்திய சந்தையில் தனது விமானங்களை வினியோகிக்க காத்திருக்கும் AirBus நிறுவனமானது, 2017-ஆம் ஆண்டு முதல் 2036-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 1750 விமானங்களை தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் 1320 விமானங்கள் சிங்கல்-ஆஸில் விமானங்கள் எனவும் 430 வொய்ட் பாடி விமானங்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!