கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜி.டி.தேவகவுடா படிப்பு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் குமாரசாமி கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலோசனைக்குப் பிறகு கர்நாடக அமைச்சரவை கடந்த புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 25 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் 14 பேரும், மஜத சார்பில் 9 பேரும், பகுஜன் சமாஜ் மற்றும் கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சிகளை சேர்ந்த தலா 2 பேரும் அமைச்சராகினர். இதற்கிடையே, முக்கிய துறையான கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சராக மஜத கட்சியைச் சேர்ந்த ஜி.டி. தேவேகவுடா நியமிக்கப்பட்டார்.


இவரது நியமனத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜி.டி.தேவகவுடா 8-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்பது தான் காரணம். 8-ம் வகுப்பு மட்டுமே படித்தவரை உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கக் கூடாது என முதல்வர் குமாரசாமிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இந்த சர்ச்சைக்கு கர்நாடக முதலவர் குமாரசாமி பதிலளித்துள்ளார். 


இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியதாவது..! 


``நான் மட்டும் என்ன படித்துவிட்டேன்?. நான் முதல்வர் ஆகப் பணிபுரிகிறேனே. நான் வேண்டுமானால் அவருக்கு நிதித் துறை கொடுக்கவா?. சிலருக்கு சில துறைகளில் பணியாற்ற விரும்புவர். ஆனால் ஒவ்வொரு துறையிலும் திறமையாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது. அதில் தான் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும். சில அமைச்சகங்களில் நமக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் அதனைக் கட்சிகள் தான்முடிவு செய்ய முடியும் எனப் கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடகா முதலைமச்சர் குமாரசாமி ஒரு பி.எஸ்.சி. பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது!