கார் திருட்டு: டெல்லி போலீஸ் அலச்சியத்திற்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டதை அடுத்து, டெல்லி போலீஸ்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்,
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது? என்று கூறியுள்ளார்.