புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்கு கதறி அழுத யோகி ஆதித்யநாத்: WATCH
புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த உத்தப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது!!
புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த உத்தப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது!!
கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த உத்தப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைநகர் லக்னோவில் பொறியியல் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, தீவிரவாத பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு தீவிரவாதத்தை ஒழிக்கும் என்று தெரிவித்தார். பதில் கூறி முடித்தவுடன் கண்ணீர் சிந்திய அவர், கைக்குட்டையை எடுத்து மூக்கையும், கண்களையும் துடைத்தார்.