கேரளாவில் 23 வயது கேரளா மாணவர் நியாபா வைரஸ் நோயால் பாதிப்பு; மக்கள் பயப்பட வேண்டாம் என அரசு கோரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் ரத்த மாதிரிகள் புனே -யில் உள்ள வைரஸ் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கிருந்து வந்த முடிவுகளில் நோயாளி நிபா வைரஸால் பாதிக்கட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நோயாளி, தற்போது எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 86 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து, கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே ஷைலஜா கூறுகையில்; நிபா வைரஸை சமாளிக்க, கேரள அரசு எல்லா விதத்திலும் தயாராக உள்ளது. கடந்த வருடம், இதே வைரஸ் தாக்கத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தினால், தற்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊடகங்கள், வைரஸ் பற்றிய பீதியை மக்களிடம் பரப்ப வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வரவேண்டும். ஒரு நோயாளிக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்து தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நோய் பரவாமல் தடுப்போம் என தெரிவித்துள்ளார்.


நிபா வைரஸ் முதலில் லேசான காய்ச்சலுடன் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் நிபா வைரஸினால் கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.