முன்னதாக சில தினங்களுக்கு முன்பு பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைகாட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்போது இஸ்லாமிய மத நம்பிக்கையின் முக்கிய பாத்திரமான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைத் தொடர்ந்து மற்றொரு பாஜக நிர்வாகியான அனுல் ஜிண்டால் தனது டுவிட்டர் பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார்.


இவர்களது கருத்துகள் மிகவும் குறுகிய நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் கவனத்தை சென்றடைந்தது. இதனால் இந்தியா மட்டும் இல்லாமல், துபாய், சவுதி, கதார் போன்ற வளைகுடா பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களும் கண்டனம் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து, நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் வழக்குகள் பதியப்பட்டது. மேலும், கட்சி ரீதியாகவும் அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது. 



இதற்கிடையே, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தின்போது பல நகரங்களில் கலவரங்கள் மூண்டன.


இந்த வகையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின்போதும் பெரும் கலவரம் வெடித்தது. ஒரு சமையத்தில் போராட்டக்காரர்கள் அங்கிருக்கும் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் தடுக்க வந்த போலீஸார் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டன. 


இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தீவிர வன்முறையில் ஈடுபட்ட கலவரகாரர்களை கட்டுப்படுத்த வேறு வழியே இன்றி போலீஸார் துப்பாக்ச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நினைவுகூறும் இந்நிகழ்வு பலரது கண்டனத்திற்கு உள்ளானது. கன்னீர் புகை குண்டுகளை கொண்டு தாக்குவது, நீரை பீய்த்து அடித்து கூட்டத்தை கலைப்பது போன்ற முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டுமே தவிர மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது மனித உரிமைக்கு வந்த கேடாக கருதப்படுகிறது என பலர் தங்களின் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.


மேலும் படிக்க | சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றம் - நிதின் கட்கரி முக்கிய தகவல்



மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.


இந்நிலையில், சாதாரண மக்களும் காயமுற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி கலவரத்தின்போது கடைக்கு சென்றிருந்த அப்சார் (24) என்ற இளைஞர் மீது சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 


உடனடியாக கிடைத்த மருத்துவ உதவியால் அவர் உயிர்காப்பாற்றப்பெற்றார். மேலும், அவரை சோதித்ததில் அவரது வயிற்றுப் பகுதி மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் 6 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்தது. அந்த இடங்களில் இருந்து ரத்தப் போக்கும் அதிகமாக இருந்ததால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என முதலில் மருத்துவர்கள் தெரிவித்தனர். 


எனினும், பின்னர் நடத்தப்பட்ட தீவிர சிகிச்சையில் அவரது உடலில் இருந்து 4 குண்டுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன, இரு குண்டுகள் இன்னும் உடலில் இருப்பதாக தெரிகிறது. 


தற்போது அப்சார் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் அவரது உடலில் 2 குண்டுகள் இருப்பதாகவும், சில நாட்கள் கழித்து அவை அகற்றப்படும் எனவும் மருத்துவர்கள் கூறினர். 6 குண்டுகள் பாய்ந்தும் இளைஞர் உயிர் பிழைத்தது உண்மையில் மருத்துவ வரலாற்றில் வியக்கத்தக்க நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | குட் நியூஸ்: பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக குறையும் மின்சார வாகனங்களின் விலை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR