மும்பை: மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வுக்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கான என்சிபி-காங்கிரஸ் (Congress-NCP) கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியமான கூட்டம், தற்போது மும்பையில் (Mumbai) உள்ள ட்ரைடென்ட் ஹோட்டலில் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தன. கூட்டத்தில் என்சிபியின் மூத்த தலைவரும், கட்சியின் தலைவருமான சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான தங்கள் விருப்பத்தை ஆளுநரிடம் கோரிக்கை வைத்த பின்னர், ஒரு நாள் கழித்து, இரு கட்சிகளும் ஒரு கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தன. அந்த குழு தான் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. 


தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சாகன் பூஜ்பால், தனஞ்சய் முண்டே மற்றும் நவாப் மாலிக் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த பாலாசாகேப் தோரத், அசோக் சவான், பிருத்விராஜ் சவான், மணிகிராவ் தக்ரே மற்றும் விஜய் வதேட்டிவார் என இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கபபட்டு உள்ளது. 


நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனையில், மகாராஷ்டிராவுக்கான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் என்சிபி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் "50 -50 அதிகாரப் பகிர்வு சூத்திரம்" குறித்து ஒருமித்த கருத்துக்கு ஷரத் பவாரின் என்.சி.பி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வந்துள்ளதாக ஜீ மீடியாவிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.


இரு தரப்பினரும் தலா 2.5 வருடங்களுக்கு முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது, அதே சமயம் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் மூன்றாவது பங்காளியான காங்கிரஸ் ஐந்து வருடத்திற்கு துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் பதவியில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.


மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் மற்றும் மாநிலத்தில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் அரசாங்கத்திற்கான பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் குறித்து பரந்த ஒருமித்த உடன்பாடு ஏற்பட்டவுடன்,இந்த மூன்று கட்சிகளும் முறையான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.


பி.ஜே.பி உடனான 25 ஆண்டுகால பழைய உறவுகளை துண்டித்து, சிவசேனா என்.சி.பி மற்றும் காங்கிரஸின் ஆதரவை நாடியது. மகாராஷ்டிராவில் மிகப் பெரிய ஒற்றை கட்சியாக உருவெடுத்த போதிலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் பாஜக அரசாங்கத்தை அமைக்க மறுத்து விட்டது, அதே நேரத்தில் சிவசேனா ஆதரவு கடிதம் வழங்கத் தவறியதால் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். அதன் பின்னர் செவ்வாயன்று (நவம்பர் 12) ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தார். 


மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் உள்ளன. மற்ற இடங்களில் சிறிய கட்சி மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளன.


மகாராஷ்டிரா தேர்தலுக்கு முந்தைய பாஜக - சிவசேனா கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் சிவசேனாவின் 50-50 சூத்திரத்திற்கான கோரிக்கையின் காரணமாக இந்த கூட்டணி இறுதியில் முறிந்தது. அதன் பிறகு சிவசேனா என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணியுடன் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.