இந்தியாவை $10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள்: மோடி!!
இந்தியாவை 10-டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கி, உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக மாற்றுவதே குறிக்கோள் என மோடி தெரிவித்துள்ளார்!!
இந்தியாவை 10-டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கி, உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக மாற்றுவதே குறிக்கோள் என மோடி தெரிவித்துள்ளார்!!
இந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள் என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். டெல்லியில் "த எக்கனாமிக் டைம்ஸ்" பத்திரிக்கை நடத்தும் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சகங்களுக்கும்,தனிநபர்களுக்கும் இடையே யார் அதிக ஊழல் செய்வது என்பது தொடர்பாக போட்டி நடந்து கொண்டிருந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
முந்தைய ஆட்சியின் இந்த ஊழல் போட்டியில் கலந்து கொண்டிருந்த முக்கிய நபர்கள் யார் என்பது தமக்கு தெரியும் என்றும் மோடி கூறினார். பாதுகாப்புத்துறை, நிலக்கரி சுரங்கங்கள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் கடந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக மோடி புகார் கூறினார். தற்போதைய அரசில், அமைச்சகங்கள், மாநிலங்கள், மேம்பாட்டுத் திட்டங்கள், இலக்கை அடைதல் ஆகியவற்றுக்கு இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மோடி தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதுடன், பணவீக்க விகிதம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எண்ணிலடங்கா தொடக்க நிறுவனங்களை உருவாக்கி, 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு என்று மோடி கூறினார்.
avoiding, burying, confusing என்ற ABC மனநிலையில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்று கூறிய மோடி, ஒரு விசயத்தை தவிர்க்கவோ, புதைக்கவோ, குழப்பவோ கூடாது என்றும் மாறாக அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.