பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைத்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தி முடித்தார்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்களை சந்தித்து பேசிய பிறகு, பாதுகாப்பு படையினரையும் அழைத்து எல்லையோர பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார். யூரி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடர்ந்து எல்லையோர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளை எப்படி தடுப்பது மற்றும் எல்லை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்க இந்த கூட்டத்திற்கு ராஜ்நாத் அழைப்பு விடுத்திருந்தார்.


பாகிஸ்தானுடன் பஞ்சாப் 553 கி.மீ., ராஜஸ்தான் 1037 கி.மீ., குஜராத் 508 கி.மீ., காஷ்மீர்  1225 கி.மீ. தொலைவுக்கு  எல்லையை கொண்டுள்ளது. ராஜ்நாத்சிங் நடத்தும் ஆலோசனை மூலம் இந்தியா - பாகிஸ்தான் எல்லை முழுமையாக ராணுவத்தின் நேரடி கண்காணிப்புக்கு கொண்டு வரவதைக் குறித்து  முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்தார்.


ஆலோசனைக்கு பிறகு ராஜ்நாத் சிங் கூறியதாவது:- பாகிஸ்தான் எல்லை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைகள் மூடப்படும். பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை ஏதுவாக எல்லைகளை பாதுகாக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். 2018-ம் ஆண்டுக்குள் இந்தியா -பாகிஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்படும் என கூறினார்.