காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று ராகுல் காந்தி பதவி ஏற்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல்காந்தி இன்று முறைப்படி பதவி ஏற்றார். நேரு குடும்பத்தின் 6-வது தலைவராக பதவியேற்றுள்ள அவருக்கு சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகாளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் ராகுல் காந்திக்கு தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவரது டுவிட்டரில், வாழ்த்துக்கள் ராகுல். உங்கள் இருக்கை உங்களை வரையறுக்காது ஆனால் நீங்கள் உங்கள் நிலையை வரையறுக்க முடியும். உங்கள் குடும்ப முன்னோர்களை கண்டு நான் பெருமை அடைந்திருக்கிறேன். நீங்களும் கடுமையாக உழைத்து எனது பெருமைக்கு உரியவர் ஆவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் தோள்களுக்கு பலம் சேர்ந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.