உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி-யில் ரூ.1100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார் பிரதமர் மோடி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிகும் தொழிற்சாலையினை பார்வையிட்ட பிரதமர் மோடி அவர்கள், இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 900-வது ரெயில் பெட்டியை பிரதமர் மோடி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் உடன் இருந்தார்.


நிகழ்ச்சியை தொடர்ந்து ரயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவிக்கையில்...



ரேபரேலி வளர்சிக்காக முந்தைய காங்கிரஸ் ஆட்சி எதுவும் செய்யவில்லை எனவும், பாஜக ஆட்சியில் ரேபரேலி தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர்., ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரஸ், துறையில் சம்பந்ப்பட்ட உயர் அதிகாரிகள் கூறியதை ஏற்கவில்லை. பிறகு பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்ததையும் நம்பவில்லை. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பினையும் குறு கூற அவர்கள் தயாராக உள்ளனர் என குறிப்பிட்டு பேசினார்.



பாதுகாப்பு துறையில் காங்கிரஸ் கட்சியின் மெத்தனப்போக்கை ஒருபோதும் மன்னிக்க இயலாது. கார்கில் போருக்கு பின்னர் நம் நாட்டு விமானப்படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைத்தும், பத்தாண்டுகளாக அட்சியில் இருந்த காங்கிரஸ் இதுகுறித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை.


சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் தான் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க வெளிநாட்டு இடைத்தரகர்கள் நுழைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியினர் வெளிநாட்டினருடனே ஒப்பந்தம் மேற்கொள்ள முற்படுகின்றனர். அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மைக்கேலை நாங்கள் துபாயில் கைது செய்தோம். இந்தியாவிற்கு கொண்டு வந்த அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக அவசர அவசரமாக காங்கிரஸ் கட்சி தங்களது வழக்கறிஞரை ஏற்பாடு செய்துள்ளது எனவும் அவர் காங்கிரஸ் கட்சியினர் மீது குற்றம்சாட்டினார்.