மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் NCP கட்சி இடையேயான கூட்டணி கும்பகர்ணனை போன்றது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று மகாராஷ்டிராவின் வர்தா பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். இதை தொடர்ந்து, பிரட்சாரத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் NCP இடையேயான கூட்டணி கும்பகர்ணனை போன்றது, ஆறு மாதங்களுக்கு அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், பின்னர், எழுந்து பொதுமக்கள் பணத்தைச் சாப்பிட்ட பிறகு மீண்டும் தூங்குவார்கள் என விமர்சித்துள்ளார்.


மேலும் அவர் பேசுகையில், காங்கிரஸ் தற்போது துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலாளிகளை அவமதித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார், மோடி கழிவறைகளுக்கு தான் காவலாளியாக இருந்துள்ளார் என்று. உங்களின் அவதூறுகள் தான் எனக்கு கவுரவம். என்னை கழிவறைகளின் காவலன் எனக் கூறி நீங்கள் அவமதிக்க நினைக்கலாம். இதன் மூலம் நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நான் காவலாளியாக உள்ளேன் என்பது எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். 



இஸ்ரோ PSLV C-45 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோவிற்கும் எனது வாழ்த்துக்கள். இதற்கு முன் செயற்கோள்களை விண்ணில் ஏவப்படுவதை சிலர் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்போது நமது விஞ்ஞானிகளின் சீரிய முயற்சியால் சாமானிய மக்களும் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இன்று சாமானிய மக்கள் பலரும் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டதை பார்த்துள்ளனர்.


பாக்கிஸ்தானில் ஹீரோவாக மாறியவர்கள், அல்லது ஆதாரங்களில் பெருமைப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? "என்று மோடி கேட்டார். மகாராஷ்டிர விவசாயிகளை மறந்தவர் சரத்பவார். இது தேசியவாத காங்கிரஸ்-க்கு சோதனை காலம். எங்கு போட்டியிடுவது என்பது கூட தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 


மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கும்பகர்ணனை போன்றது. கும்பகர்ணனை போல் ஆட்சியில் இருந்த போது எல்லாம் தூங்கி விட்டு, இப்போது எழுந்து பணத்தின் மூலம் அனைத்தையும் மாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். 



எதிர்க்கட்சி மீது குண்டு வெடிப்பு, பிரதம மந்திரி மக்களை நாட்டு மக்களிடம் கேட்டார், "நீங்கள் இந்தியாவின் ஹீரோக்கள் அல்லது பாக்கிஸ்தானில் ஹீரோவாக மாறியவர்களா."