டெல்லியில் 4-3 என்ற அடிப்படையில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி
டெல்லியில் மீண்டும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையேயான கூட்டணி பற்றி விவாதம் சூடுபிடித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையேயான கூட்டணி பற்றி விவாதம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் கூட்டணி குறித்து ஷீலா தீட்சித் மற்றும் பிசி சாக்கோ ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற கட்சியின் உயர் தலைவர்களுடான சந்திப்பிற்குப் பிறகு, டெல்லி மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்ப்பட உள்ளது என்ற நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.
ஆதாரங்களின்படி, காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் 4-3 என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு 3 தொகுதிகள் வழங்க காங்கிரஸ் ஒப்பு கொண்டுள்ளது. இரு கட்சிகளும் தில்லியில் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் 4 மற்றும் ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களில் போட்டியிட முடியும்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். ஆனால் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டதாக நிருபர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் டெல்லியில் உள்ள ஏழு தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம் எனவும் கூறினார்.
டெல்லியில் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்து சரியான முடிவு காங்கிரஸ் கட்சி தான் எடுக்கவேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகளை கொண்ட டெல்லியில் வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.