அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில், பாஜக ஏற்கனவே தனது தயாராகி விட்டது. காங்கிரஸ் தரப்பில், கூட்டணி குறித்து பேசி வந்த நிலையில், தற்போது கட்சியில் சில பதவிகளுக்கு புதியவர்களை குறிப்பாக இளம் தலைவர்களை நியமித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் அரசியல் கட்யின் சக்தி வாய்ந்த செயலாளராக இருந்த சோனியா காந்திக்கு பதிலாக மோதிலால் வோரா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் புதிய தலைவராக ஆனந்த் சர்மா நியமிப்பு.



அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கட்சியின் பொருளாளராக அஹ்மத் படேலை நியமித்தார். 


காங்கிரஸ் கட்சியில் திவா விஜய்சிங், சுஷில்குமார் ஷிண்டே மற்றும் ஜனார்த்தன் திவிவேதி உட்பட சில மூத்த தலைவர்கள் இருக்கும் போது, இளம் முகங்களை நியமித்து இருப்பது, காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறையினர் சமவாய்ப்பு அளிக்கப்படும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.



எனினும், காங்கிரஸ் காரிய கமிட்டியில்  கே கே அந்தோனி, அஹ்மத் படேல், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஆனந்த் சர்மா மற்றும் குமாரி செல்ஜா போன்ற வீரர்கள் அடங்குவர்.



புதிய காங்கிரஸ் காரிய கமிட்டியில் 23 உறுப்பினர்கள், 19 நிரந்தர அழைப்பாளர்களை மற்றும் 9 சிறப்பு அழைப்பாளர்களை உள்ளடக்கியுள்ளது.