குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதிலும், பிரதமர் மோடியின் சொந்த ஊரில் சோபிக்க முடியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வட்நகரில் உள்ள உன்ஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேல் 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்


182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் கடந்த 1997-98 தேர்தல் முதல் தொடர் வெற்றிப் பெற்றுள்ள பாஜக, தற்போது தனிபெரும்பான்மையோடு வெற்றிப்பெற்று 6 வது முறையாக, தங்களது ஆட்சியை பலமாக ஊன்ற உள்ளது. 


இன்று வெளியான குஜராத் தேர்தல் முடிவில் பாஜக 99 தொகுதிகளை வென்றது, இந்த வெற்றிக்கு காரணம் மோடியின் பரப்புரை தான் என கட்சியினர் அணைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், எனினும் அவரது பரப்புரை அவரது சொந்த ஊரிலே எடுபடாமல் போனது பாஜக-வினரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது!