ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை, இன்று ராய்பூரில் நடைபெற்ற MLA-க்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. 5 நாள் அமைத்திக்கு பின்னர் காங்கிரஸ் தலைமை சட்டீஸகர் முதல்வர் பெயரினை அறிவித்துள்ளது.


நடந்து முடிந்த சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் இம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.



மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெலே, TS சிங் டியோ, தம்ரவாஜ் சாஹு, சந்திரன் தாஸ் மஹன்த் ஆகியோருக்கு இடையே முதல்வர் போட்டி நிலவி வந்த நிலையில், இன்று கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்ராக பூபேஷ் பாகெலே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.


முன்னதாக நேற்று நான்கு தலைவர்களுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி, இன்று இந்த முக்கிய முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது.


காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தற்போது முதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அறிவிக்கப்பட்டு முதல்வர்கள் பதவியேற்பார்கள் என தெரிகிறது.