நடந்து முடிந்த கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
 
நடந்துமுடிந்த இந்த தேர்தலில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இககூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. இன்று காலை 8 மணியளவில் துவங்கி வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடக சட்டமன்ற தேர்தல் அடுத்த பாஜக மீண்டும் தனது பலத்தினை நிரூபிக்க இந்த தேர்தலினை எதிர்பார்து வந்த நிலையில் இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி பாஜக பலத்த தோல்வியை கண்டுள்ளது.


பாராளுமன்ற தொகுதிகள்...


  • சிவமோகா : சிவமோகா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகவேந்திரா 5,21,48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  • பெல்லாரி : பெல்லாரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2,43,161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  • மாண்டியா : மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை விட ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சிவராமெகவுடா 3,24,943 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


சட்டமன்ற தொகுதிகள்...


  • ராமநகரம் : ராமநகரம் சட்டமன்றம் தொகுதியில் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அனிதா குமாரசாமி 1,09,137 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  • ஜம்கண்டி : ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியாமகவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 39,480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


நடந்து முடிந்த 5 இடங்களுக்கான தேர்தலில் பாஜக ஒரு இடத்தினை(சிவமோகா) மட்டும் மீட்டுள்ளது. மற்ற நான்கு இடங்களை காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வென்றுள்ளது.