குஜராத்தில் பேரணியில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் ப்ளார் என அறைந்த நபர்: வீடியோ
குஜராத் சுரேந்தர் நகரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் நிர்வாகியான ஹர்திக் பட்டேல் கன்னத்தில் ஓங்கி அறைந்த நபர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயக்கடன் தள்ளுபடி, கல்வியில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் படேல் முன்னின்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். மேலும் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதமும் இருந்தார். இவரின் இந்த போரடத்துக்கு பட்டேல் சமூகத்தினர் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அரசியலில் நுழைந்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
தற்போது 17வது மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால், கட்சிக்காக தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில், குஜராத் மாநிலம் சுரேந்தர் நகரில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது மேடை மீது ஏறிவந்த ஒரு நபர் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கன்னத்தில் அறைந்தவரை அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளது. விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
அதுக்குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.