லக்னோ: உ.பி. போலீசாரின் தவறான நடத்தை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர் சுற்றி வளைத்து கழுத்தை நெரித்ததாக பிரியங்கா கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி. போலீசார் மீது குற்றம் சாட்டி பிரியங்கா காந்தி கூறியது, நான் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்றேன். அந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு காரணம் உத்தர பிரதேச அரசாங்கம். அவர்களை நான் பார்க்க செல்வதை ஏன் உ.பி. அரசு தடுக்கிறது. நான் அமைதியாக தான் போகிறேன். எனது கார் கார் நிறுத்தப்பட்டது. நான் காரில் இருந்து இறங்கி கால்நடையாகச் சென்றேன். ஆனால் உ.பி. போலீசார் என்னை சுற்றி வளைத்து கழுத்தை நெரித்தனர். பாதிக்கப்பட்ட நபர்களை சந்திப்பதை தடுப்பதற்கான காரணங்களைக் கூறுங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை வலுகட்டாயமாக தடுத்து நிறுத்தி தள்ளி விட்டனர் எனக் கூறினார்.


இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, "உ.பி. காவல்துறை பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை வழியில் நிறுத்தி, ஒரு போலீஸ் அதிகாரி பிரியங்கா ஜியின் தொண்டையை இழுக்க முயன்றார். பிரியங்கா காந்தி ஜி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி தாராபுரியின் குடும்ப உறுப்பினர்களையும், அவரது உடல்நிலை சரியில்லாத மனைவியையும் சந்திக்க சென்றார்.  பிரியங்கா காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உ.பி. போலீசார் தவறாக நடந்து கொண்டனர். உ.பி.யில் உள்ள பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.


அதாவது, குடியுரிமைச் சட்டத்தையும் என்.ஆர்.சி யையும் எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட முன்னாள் சமூக ஆர்வலர் எஸ்.ஆர்.தராபுரியின் குடும்பத்தை பிரியங்கா காந்தி சந்திக்கப் போகிறார். உ.பி. போலீசார் அவரது காரை லோஹியா பூங்கா அருகே தடுத்து நிறுத்தினர். பின்னர் பிரியங்கா கால்நடையாக சென்றார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.