பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்தபின் கண்டுகொள்வதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு வரும் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சத்தீஸ்கரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சத்தீஸ்கர் மாநிலம், கான்கெர் மாவட்டத்தில் உள்ள பஹஞ்சூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி அவர்கள், பாஜக தலைவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்தபின் கண்டுகொள்வதில்லை என விமர்சித்துள்ளார்.


மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நீண்ட வரிசையில் நின்ற மக்கள் கூட்டத்தில் ஒரு கருப்பு பண முதலைகளையும் காண முடியவில்லை என குறிப்பிட்ட அவர்., கருப்பு பணத்தை மீட்கபோவதாக கூறிவரும் பாஜக ஆட்சியில் தான், நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, மெஹூல் சோக்ஸ்கி போன்றவர்கள் மக்கள் பணத்தை எடுத்துக்கொண்டு, வெளிநாடுகளுக்கு தப்பிசென்றுள்ளனர் என குற்றம்சாட்டியிருக்கிறார்.



பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என வாக்குறுதி அளித்த பாஜக தேர்தல் முடிந்தவுடன், துடைப்பத்தை கையில் எடுத்துக்கொண்டு, தூய்மைப்பணியில் ஈடுப்பட்டு வருகிறது.


ஆதிவாசி மக்களின் நிலங்களை பாதுகாக்க நிலம் கையகப்படுத்துதல் சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதாகவும், அதனை பாஜக அரசு பாழ்படுத்தி விட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.