மத்திய அரசு முன் ஏழைகள், புலம்பெயர்ந்தோர், சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் குரலை உயர்த்த உதவும் வகையில் மே 28 அன்று காங்கிரஸ் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு SpeakUp என பெயரிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்சித் தலைவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அனுதாபிகள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆன்லைன் பிரச்சாரத்தை நடத்துவார்கள் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார்.


"புலம்பெயர்ந்தோர் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்வதை உறுதிசெய்யவும், MGNREGA-ன் கீழ் அவர்களின் வேலை நாட்களை 200-ஆக உயர்த்தவும், சிறு தொழில்களுக்கான நிதிப் பொதியைத் தவிர ஏழைகளுக்கு உடனடி நிதி உதவியாக ரூ.10,000 வழங்கவும் போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும்" என்றும் அவர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



காங்கிரஸ் சமூக ஊடகத் துறைத் தலைவர் ரோஹன் குப்தா, அனைத்து கட்சித் தலைவர்களும் தொழிலாளர்களும் தங்களது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகள் மூலம் செய்திகளை வெளியிடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த பிரச்சாரத்தின் போது பிரதாண எதிர்கட்சி குறு வீடியோக்களையும் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்கள், ராகுல் காந்தியின் செயல்பாடு குறித்து விமர்சித்தார். மேலும் தேசிய பூட்டுதல் தோல்வியில் முடிவடைந்துள்ளது என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் அவதூறாகப் பேசியுள்ளார்.