நீதித்துறை, சட்ட நிறுவனங்கள், நாடு ஆகியவற்றிற்கும் மேலாக தங்களைக் காங்கிரஸ் கருதுகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (பெயர் மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்) மாவட்டத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, "நீதித்துறை, சட்ட நிறுவனங்கள், நாடு ஆகியவற்றிற்கும் மேலாக தங்களைக் காங்கிரஸ் கருதுகிறது" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் தங்களின் தனி லாபத்திற்காக சட்டத்தை தன் பக்கம் வலைத்துக்கொள்ளும் பிரதான கட்சி காங்கிரஸ் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.



மேலும் நீதித் துறை மீது காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ் செயல்கள் மற்றும் சதித்திட்டங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, நீதித்துறையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு எனவும் கூறினார். 


நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த பெரிய கட்சி, தற்போது நீதித்துறையினை கட்டுக்குள் கொண்டுவர நினைக்கின்றது. தங்களக்கு ஆதரவாக செயல்படாத அனைத்து நிறுவனங்களையும் அடியோடு அழிப்பது தான் இவர்களது அயராத பணி. உத்திரபிதேச மாநிலத்தில் உள்ள பிரயாகராஜ் என்பது, கோவில்களின் நீதி மையம் ஆகும், ஆனால் இந்த பெரிய கட்சி இந்த புனித இடத்தில் கோவில்களுக்கான நெருக்கடி கொடுக்கும் விளையாட்டை விளையாடி வருகின்றது.


ஜனநாயகம், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் நலன் ஆகியவற்றிற்கு மேல் தங்களைக் மேன்மையானவர்களாக காங்கிரஸ் கருதுவது இத்தகைய செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கின்றன. இத்தகு நிலையில் நாட்டின் பாதுகாப்பினை பேன, நாட்டில் உள்ள இளைஞர்களை விழித்தெழ வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். வரும் தேர்தலில் இளைஞர்கள் அவர்களது பலத்தினை நிறுபிப்பார்கள் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. 


முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான இந்திரா காந்தி அவர்களை குறிப்பிட்டு பேசிய மோடி அவர்கள்... 'காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர் மக்களை ஆட்கொண்டிருந்த நாள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், நாட்டு மக்களை ஆட்கொண்ட தலைமையினை முடிவுக்கு கொண்டு வந்ததினையும் இந்நாட்டு மக்கள் மனதில் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டு பேசினார்.



தொடர்ந்து பேசிய அவர் பிரயாக்ராஜ் விரைவில் ஸ்மார்ட் நகரமாக மாற்றப்படும் என்று மக்களுக்கு உறுதி அளித்தார். பிரயாகரஜில் உள்ள கும்ப் புனித யாத்திரை நவீனமயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


தங்களது அரசாங்கம் பிரியாக்ராஜை அபிவிருத்தி செய்வதற்கும், கங்கை சுத்திகரிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், நம்ம-கங்கா திட்டத்தில், சுமார் 150 குடவரைகளை அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதில் 50 குடவரைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.