எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பார் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற 10 நாட்களே மீதம் உள்ள நிலையில் இன்று ZEE செய்திகள் தொலைகாட்சிக்கு பாஜக தலைவர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார். இந்த நேர்காணலின் போது கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சி குறித்தும், தேர்தல் ஏற்பாடுகள் போன்ற விவரங்களை பகிர்ந்துக்கொண்டார்.


நாட்டின் முன்னேற்றத்திற்காக பாஜக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், வரும் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பார் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர்., பாஜக தொண்டர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று நலப்பணி திட்டங்களை செய்வார் எனவும், மக்களின் நலனுக்காக தங்கள் கட்சி என்ன செய்யவேண்டும் என்பதிலும் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் மோடி, இந்தியாவின் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தன்று அனைவருக்கும் சொந்த வீடு என்ற நிலையை கொண்டுவருவார் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.


மேற்குவங்கத்தில் பாஜக நிலைபாடு குறித்து பேசிய அவர், வரும் தேர்தலில் பாஜக-வின் பலத்தை பற்றி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிந்துக்கொள்வார் எனவும் தெரிவித்தார்.


இந்தியாவில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு காரணம் காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டிய அவர், இந்து பயங்கரவாதிகள் இந்தியாவில் இல்லை எனவும், பாகிஸ்தான் ஆதரவில் வளரும் தீவிரவாதிகளே இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். இந்தியாவில் தீவிரவாதத்தினை ஒடுக்கிய பெருமை பாஜக-வையே சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.


நாட்டின் நிலைமை எதுவாக இருந்தாலும், பிரதமர் மோடியின் கீழ் இயக்கும் ஆட்சி நாட்டு மக்கள் அனைவருக்கும் வெற்றியே பரிசாக அளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்து குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் மக்களின் மனதில் மறைந்து போகும் எனவும் அவர் தெரிவித்தார்.