90 தொகுதிகள் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த நவ., 12 மற்றும் நவ., 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்றது. சத்தீஷ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் + பகுஜன் சமாஷ் கூட்டணி என மும்முனை போட்டி நடந்தது. தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாக விவசாயிகள் கடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, நக்சல்கள் பிரச்சனை போன்றவை முக்கிய பங்கு வகித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று சத்தீஷ்கர் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக 15 தொகுதியிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ்(5) மற்றும் பகுஜன் சமாஷ் கூட்டணி(2) 7 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. 


இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தோல்வி அடைந்ததுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி கட்டலில் ஏறி உள்ளது. இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் சிறு குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று சத்தீஷ்கர் மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு தெரியவரும் முதலமைச்சராக யார் பதவியேற்க்க உள்ளார்.


கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தை பிரித்து சத்தீஷ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்பொழுது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் முதல் முறையாக வெற்றி பெற்றது. அஜித் ஜோகி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி 50 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்து வந்தது. 


சத்தீஷ்கர் மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. அப்பொழுது காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்பொழுது காங்கிரசுக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்தது.