Corana: சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் மத்திய அரசு அறிவிப்பு
உலகையே தனது கோரப்பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. உலக பொருளாதரம் மந்தமாகவே நகர்கிறது. இந்தியாவும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கான கொரோனா நோயாளிகளை மீட்டெடுப்பதில் பலரும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
புதுடெல்லி: உலகையே தனது கோரப்பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. உலக பொருளாதரம் மந்தமாகவே நகர்கிறது. இந்தியாவும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கான கொரோனா நோயாளிகளை மீட்டெடுப்பதில் பலரும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் முன்களப் பணியாளர்களாக இருப்பவர்கள் சுகாதார பணியாளர்கள். அவர்கள் கொரோனா வாரியர்ஸ் (Corona Warriors) என்று அழைக்கப்படுகிறார்கள்.
கொரோனாவில் (Coronavirus) இருந்து பிறரை பாதுக்காக்க அர்பணிப்புடன் போராடி வரும் முன்களப் பணியாளர்களையும் கொடிய கொரோனா வைரஸ் விட்டு வைப்பதில்லை. பலர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர். பலர் பலியாகி விடுகின்றனர்.
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு (Central Government) சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
ALSO READ | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோன தொற்று உறுதி!
பிரதான் மந்திரி கரிப் கல்யான் (Prime Minister Karib Kalyan) எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 3 முறை நீட்டிக்கப்பட்டது. இதில் 3-வது முறை நீட்டிக்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு வருகிற 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே 24-ஆம் தேதிக்குப்பிறகு சுகாதார பணியாளர்களுக்காக புதிய காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Also Read | Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதில் இந்த திட்டம் ஒரு முக்கியமான உளவியல் பங்கைக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளது.
கொரோனா வாரியர்ஸ்க்கான இந்த காப்பீட்டு திட்டம் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஒரு புதிய காப்பீட்டுக்கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR