புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட, சனிக்கிழமை (மே 2) 37,776 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளில், நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக 1223 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது மொத்தம் 26,535 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 2411 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த வைரஸ் காரணமாக 71 பேர் உயிர் இழந்துள்ளனர். 


மகாராஷ்டிராவில் அதிக அளவில் மரணம்:


சனிக்கிழமை (மே 2) மாலை 5 மணிக்கு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. கோவிட் -19 ஆல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 485 இறப்புகளும், மத்திய பிரதேசத்தில் 145 பேரை மரணமடைந்து உள்ளனர். அதே நேரத்தில், குஜராத்தில் தொற்றுநோயால் 236 பேரும், டெல்லியில் 61 பேரும் இறந்துள்ளனர்.


கொரோனா வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் 11506 பேர் இருப்பதாக மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது. இதன் பின்னர், 4721 பேருடன் குஜராத் இரண்டாவது இடத்திலும், 3738 பேருடன் டெல்லி மூன்றாவது இடத்திலும், 2719 ஒஎருடன் மத்தியப் பிரதேசம் நான்காவது இடத்திலும் உள்ளன. 


கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 82 புதிய தொற்று பதிவாகியுள்ளன, இந்த எண்ணிக்கை 2666 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில், மேலும் நான்கு நோயாளிகள் இறந்த பின்னர் இறப்பு எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 1116 நோயாளிகள் குணமாகியுள்ளனர். 


நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 47 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகிய பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2328 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை மாநிலத்தில் 654 நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


தென் இந்தியா மாநிலங்கள்:


தென் இந்திய மாநிலமான தமிழகத்தில், 161 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து மாநிலத்தில் எந்த நபரும் இறக்கவில்லை. இந்த எண்ணிக்கை 28 ஆக உள்ளது. இதுவரை, மாநிலத்தில் 1312 நோயாளிகள் குணமாகியுள்ளனர். 


ஆந்திராவில் 1525 பேருக்கும், கர்நாடகாவில் 598 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்த மாநிலங்களின் இறப்பு எண்ணிக்கை 33 மற்றும் 25 என உள்ளது. தென் மாநிலமான தெலுங்கானாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1057 ஆக உயர்ந்துள்ளது மற்றும் இறப்பு எண்ணிக்கை 26 ஆக உள்ளது. கேரளாவில் 498 பேருக்கு தொற்று மற்றும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.