Corona Second Wave: உதவிக் கரம் நீட்டும் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா
உலகிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய உதவிய இந்தியாவிற்கு, இந்த நெருக்கடி நிலையில், சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3.5 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
உலகிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய உதவிய இந்தியாவிற்கு, இந்த நெருக்கடி நிலையில், சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
ALSO READ | அடிபணிந்தது அமெரிக்கா; தடுப்பூசி மூலப்பொருள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என உறுதி
கொரோனா நெருக்கடியை சந்திக்கும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குநரும், இந்திய வம்சாவளியை சேந்தவருமான திரு.சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ .135 கோடி நிதியை வழங்குவதாகவும் மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம், மற்றும் ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி நிதியை அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான சத்ய நாதெல்லாவும், இந்தியாவின் கொரோனா நெருக்கடி சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு, ஆக்சிஜன் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்கி மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவிற்கு உதவி புரியும் என்று கூறியுள்ளார்.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR