Corona Vaccine Price Hike: கொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநில அரசுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) புதன்கிழமை (ஏப்ரல் 21) தனது தடுப்பூசி கோவிஷீல்டு ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ. 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ .600 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
புது டெல்லி: மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) புதன்கிழமை (ஏப்ரல் 21) தனது தடுப்பூசி கோவிஷீல்டு ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ. 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ .600 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் விற்பனை செய்கிறது.
இவை நிறுவன விற்பனையின் விலைகள், அதிகபட்ச சில்லறை விலை அல்ல, அவை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு விசியத்தில் கூடுதல் தெளிவு வேண்டும் மருத்துவமனைகள் காத்திருப்பதாகவும், நுகர்வோர் ஏற்க வேண்டிய இறுதி விலை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக, மருந்து நிறுவனங்கள் ஒரு வர்த்தக சேனல் மூலம் மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விற்கின்றன. இது விலையில் 10-15 சதவீத வித்தியாசத்தைக் கொண்டுள்ளது.
ALSO READ | கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
SII தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவல்லா (Adar Poonawalla) ஒரு தொலைக்காட்சி சேனலிடம் பேசுகையில், மத்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ .150 என்ற விலையில் விற்பனை செய்வதால், பெரும் தொகையை நாங்கள் இழக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் 50 சதவீத விலையை அஸ்ட்ராசெனெகாவுக்கு (AstraZeneca) ராயல்டியாக செலுத்த வேண்டும் என்றார்.
45-60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம். நாங்கள் இன்னும் பலருடன் கூட்டாக சேர்ந்து பணியாற்ற ஆராய்வோம். கார்ப்பரேட்டுகள் தங்கள் அலுவலகங்கள் அல்லது ஆலைகளில் தேவையான உள்கட்டமைப்பை வழங்கினால், நாங்கள் தடுப்பூசி வேகத்தை அதிகரிக்க முடியும், என்று அவர் கூறினார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் தனியார் மருத்துவமனைகளுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடங்கும் என்றும், மே மூன்றாம் அல்லது நான்காவது வாரத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தடுப்பூசிகள் தனியார் சந்தையில் ஒரு டோஸுக்கு 1,500 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், தடுப்பூசி விலைகள் போட்டித்தன்மை வாய்ந்தவை என்றும், ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள ஒரு டோஸுக்கு 750 ரூபாய்க்கு மேல் செலவாகும் என்றும் கூறினார்.
எஸ்ஐஐ இப்போது ஒவ்வொரு மாதமும் 65-70 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட்டை தனது புனே ஆலையில் தயாரித்து வருகிறது. மேலும் அதை 100 மில்லியன் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை சிக்கலாகவும் மற்றும் அவசரமாக உள்ளதால், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக தடுப்பூசி வழங்குவது சவாலானது என்றும் கூறினார். அனைத்து பெருநிறுவன மற்றும் தனி நபர்களுக்கும் தடுப்பூசிகளை அரசு ஏற்படுத்தி உள்ள அமைப்புகள் மூலமாகவும், தனியார் சுகாதார அமைப்புகள் மூலமாகவும் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். 4-5 மாதங்களுக்குப் பிறகு, சில்லறை மற்றும் தடையற்ற வர்த்தகத்தில் தடுப்பூசிகள் சந்தையில் கிடைக்கும் என்று அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR