தற்போது சற்றே ஆசுவாசம் தரும் விதமாக இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து ஆறாவது நாளாக குறைந்து வருகிறது. 4,00,000 என்ற அளவை கடந்த ஒரு தொற்று பாதிப்புகள், இன்று மூன்று லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
 
இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 2,81,386 புதிய கோவிட் -19 (COVID-19) தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 4,106 பேர் கொரோனாவால் இறந்து விட்டனர். 34,389 தொற்று பாதிப்புடன் மகாராஷ்டிராவும், 33,181 தொற்று பாதிப்புடன்  தமிழகமும் அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக உள்ளது.  31,531 தொற்று பாதிப்புடன்  கர்நாடகாவும், 29,704 தொற்று பாதிப்புடன்  கேரளாவும் அடுத்த நிலையில் உள்ளன. ஆந்திராவில் 24,171 தொற்று பாதிப்புகள்  பதிவாகியுள்ளன. புதிய வழக்குகளில் 54.37% இந்த ஐந்து மாநிலங்களிலிருந்தும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,106 இறப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் (974) அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அதன் பின்னர் கர்நாடகாவில் 403  இறப்புகள் பதிவாகியுள்ளன.



முன்னதாக, கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தின் போக்கு கலவையாக உள்ளது என்றாலும், ஒட்டுமொத்தமாக, நிலைமை மேம்பட்டு வருகிறது. தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால்  இந்த தொற்றுநோயின் தாக்கத்தை விரைவில் வீழ்ச்சியடையச் செய்வோம்” என்று நிதி ஆயோக் (NITI Aayog) உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | DRDO 2-DG: கொரோனா சிகிச்சையில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR