Coronavirus 4th Wave: வந்துவிட்டதா நான்காவது அலை; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்
Coronavirus 4th Wave: நாட்டில் கொரோனா வைரஸின் நான்காவது அலை தொடங்கியுள்ளதா? இதைப் பற்றி ஒரு புதிய அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் எண்ணிக்கைகளை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கான காரணங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் மருத்துவ நிபுணர்களும் கலந்து கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் ஒரு அறிக்கையின்படி, கடந்த சில நாட்களாக, நாட்டில் கொரோனா வைரஸ் எண்ணிக்கைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. பலர் இதை கொரோனாவின் நான்காவது அலை என்றும் அழைக்கின்றனர். அதன்படி செவ்வாய்கிழமையன்று கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்ததையடுத்து, புதன்கிழமை 12,249 புதிய தொற்று எண்ணிக்கை நாட்டில் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், நாட்டில் 13 பேர் கொரோனா பரவலால் இறந்துள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் இந்த தொற்றுநோயால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24,903 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு
நாட்டில் 81,687 கொரோனா நோயாளிகள்
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது செயலில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 81,687 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த தொற்று எண்ணிக்கைகளில் 0.19 சதவீதமாகும். அதேபோல் சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா தொற்று விகிதம் 3.94 சதவீதமாக பதிவாகியுள்ளது. மேலும் வாராந்திர தொற்று விகிதம் 2.90 சதவீதமாக இயங்குகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக தொற்று எண்ணிக்கை பதிவு
இதற்கிடையில் அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. அங்கு, செவ்வாய்க்கிழமை மாலை வரை 3659 புதிய கொரோனா தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. 1 நோயாளி இறந்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று விகிதம் தற்போது 9.36% ஆக உள்ளது. இந்த புதிய புள்ளிவிவரங்கள் மூலம், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24915 ஆக உயர்ந்துள்ளது. இதன் போது, மாநிலத்தில் 3356 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்
சென்னையில், கொரோனா தொற்று பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 300ஐ கடந்துள்ளதால், 4ம் அலைக்கான துவக்கமாக பார்க்கப்படுகிறது. மே மாத துவக்கத்தில், தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, இரண்டு இலக்க எண்ணில் மட்டுமே பதிவானது. இந்நிலையில், மே மாத இறுதியில், கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்தது. தொடர்ந்து, இம்மாத துவக்கத்தில், தினசரி தொற்று எண்ணிக்கை 50 என்ற நிலையில் பதிவானது.
மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
தற்போதைய கொரோனா தொற்று அதிகரிப்பு, நான்காம் அலைக்கான அறிகுறியாக பார்க்கப்படுவதால், முககவசம், சமூக இடைவெளி பின்பற்றாமை போன்ற அலட்சிய போக்கை மக்கள் கடைப்பிடிக்கும்பட்சத்தில், நான்காம் அலையை தடுக்க முடியாது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க | COVID-19: வந்துவிட்டதா நான்காவது அலை? ஒரே நாளில் புதிதாக 7,584 பேர் பாதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR