புது டெல்லி: நிர்பயா கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கின் நான்கு குற்றவாளிகளுக்கும் திகார் சிறையில் ஆலோசனை வழங்கப்படுகிறது. நான்கு குற்றவாளிகளில் இருவரான முகேஷ் சிங் மற்றும் வினய் சர்மா ஆகியோர் சிறை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததை அடுத்து, சிறை நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. வழக்கமான சோதனைக்கு வந்த சிறை ஊழியர்களுடன் அவர்கள் இருவரும் மோசமாக நடந்து கொண்டனர். அதன்பிறகு முகேஷ் மற்றும் வினய் மற்றும் அக்‌ஷய் தாக்கூர் மற்றும் பவன் குப்தா ஆகியோருக்கும் கோப மேலாண்மை குறித்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நால்வரின் நடத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒரு வாரமாக உணவு வழங்குவதற்காகவும், அவர்களிடம் பேசுவதற்காக செல்லும் சிறை அதிகாரிகளிடம் வினய் சர்மா பல முறை தவறாக நடந்து கொண்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. முகேஷ் கூட சிறை விதிகளை பின்பற்ற மறுத்துவிட்டார். வியாழக்கிழமை, வினய் தனது மோசமான மனநிலையை சுட்டிக்காட்டி டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். மேலும் தனக்கு மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 


இதனையடுத்து மருத்துவ ஆலோசகர்கள் அவரை பரிசோதித்தபோது, மன உறுதியற்ற தன்மைக்கான அறிகுறி எதுவும் வினயிடம் இல்லை என்று கூறினார்.


சிறைச்சாலையின் கிரில்ஸில் கையை இணைத்து எலும்பு முறித்துக்கொள்ள குற்றவாளி வினய் முயன்றதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. பிப்ரவரி 16 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், மறுநாள் வினயின் தாய் அவருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறினார். பிப்ரவரி 17 அன்று, வினய் தனது தாயை சந்திக்க மறுத்துவிட்டார். புதிய மரண வாரண்ட் வெளியானதிலிருந்து வினயின் மனநிலை சரியில்லை என்றும், அவரது மனநிலை மோசமடைந்துள்ளதாகவும் வக்கீல் சிங் கூறினார்.


நான்கு பேருக்கும் ஆரோக்கியமாக இருக்க சாதாரண உணவு மற்றும் பானம் வழங்கப்படுகிறது. துணிகளைத் தவிர சில மற்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க அவர்களலுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


முக்கேஷ், அக்‌ஷய், வினய் மற்றும் பவன்- இந்த நான்கு குற்றவாளிகளிலும், யாரும் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, ஏனெனில் இந்த நான்கு பேர் அவர்களை மேற்பார்வையிட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளின் சிறை அறையில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வார்டன்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகளின் செல்லுக்கு வெளியே காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் மற்ற கைதிகளுடனான அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.