பாதுகாப்பு வழங்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்ற தம்பதி நீதிமன்ற வளாகத்திலேயே கடத்தப்பட்டதால் பரபரப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரேலி பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா மகள் சாக்ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் ஆகியோரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது ஆயுதமேந்திய சிலர் கருப்பு நிற காரில் வந்து தம்பதியை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கேட் 3-க்கு வெளியே ஒரு தம்பதி நின்றுகொண்டிருந்தனர். இன்று காலை 8.30 மணியளவில் அங்கு வந்த கருப்பு நிற காரில் இருந்தவர்கள் துப்பாக்கி முனையில் அவர்களை கடத்தி சென்றுள்ளனர். அந்த கார் எண் ஆக்ராவில் பதிவுசெய்யப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் அந்த காரில் சேர்மேன் என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 


இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அனைத்து சோதனை சாவடிகளிலும் இந்த தகவலை உடனடியாக தெரிவித்தனர். சந்தேகத்திற்கிடமான வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்பட்டதில்  காரில் துப்பாக்கி முனையில் இருந்த தம்பதியை போலீசார் மீட்டனர். பரேலி எம்.எல்.ஏ சாக்‌ஷி மிஸ்ராவின் மகள் திருமண வழக்கை நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.