இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக,  2,11,298 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மொத்த தொற்று பாதிப்புகள் 2,73,69,093 ஆக அதிகரித்துள்ளது.  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,46,33,951 ஆக உள்லது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்களில் கூறப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், 3,847 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 3,15,235 ஆக அதிகரித்துள்ளது.


COVID-19 தொற்றுக்கு சிகிச்சை பெறுவர்கள் எண்ணிக்கை 24,95,591 ஆக உள்ளது. இது  மொத்த தொற்றுநோய்களில் (Corona Virus) 9.19 சதவீதம் ஆகும்.  குணமடையும் விகிதம் 89.66 சதவீதமாக உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.



மே 26 வரை நாடு முழுவதும் 20 கோடி 26 லட்சம் 95 ஆயிரத்தி 874  பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாளில் மட்டும் , 18 லட்சம் 85 ஆயிரத்தி 805 தடுப்பூசிகள் போடப்பட்டன. அதே நேரத்தில், 33 கோடியே  70 லட்சம் பேருக்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய நாளில் சுமார் 22 லட்சம் கொரோனா மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டன.


ALSO READ | சமூக ஊடகங்களில் ‘இந்திய திரிபு’ என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR