COVID-19: வந்துவிட்டதா நான்காவது அலை? ஒரே நாளில் புதிதாக 7,584 பேர் பாதிப்பு

Covid-19 Fourth Wave: நேற்று (ஜூன் 9), இந்தியாவில் 7,240 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நான்காவது அலையின் அச்சத்தைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, இந்தியாவில் கோவிட் தொற்று பதிவு 40% அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,584 பேர் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3,791 பேர் குணமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 10) புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்தனர். இதனுடன் மொத்த எண்ணிக்கை 4,32,05,106 ஆக உள்ளது. மேலும் 24 இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,24,747 ஆக உயர்ந்துள்ளது. இந்த தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,769 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த நோய்த்தொற்றுகளில் 0.08 சதவீதத்தை உள்ளடக்கியது. தேசிய கோவிட் -19 மீட்பு விகிதம் 98.70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினசரி பாசிடிவிடி விகிதம் 2.26 சதவீதமாகவும், வாராந்திர பாசிடிவிடி விகிதம் 1.50 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,44,092 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு விகிதம் 1.21 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 194.76 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்தியாவின் கோவிட்-19 எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும் தாண்டியது. செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும் இந்த எண்ணிக்கை தாண்டிச் சென்றது. அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும் தாண்டிய தொற்று எண்ணிக்கை டிசம்பர் 19 அன்று ஒரு கோடியைத் தாண்டியது. இந்தியா மே 4, 2021 அன்று இரண்டு கோடி என்ற மோசமான மைல்கல்லையும், ஜூன் 23 அன்று மூன்று கோடியையும் கடந்தது.
நேற்று (ஜூன் 9), இந்தியாவில் 7,240 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நான்காவது அலையின் அச்சத்தைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, இந்தியாவில் கோவிட் தொற்று பதிவு 40% அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று எச்சரித்துள்ளார். மேலும் பல நாடுகள் தங்கள் கொரோனா வைரஸ் நெறிமுறைகளை கைவிட்டு வைரஸுடன் வாழ முயற்சித்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பணக்கார நாடுகளில் முதல் வெகுஜன கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டங்கள் தொடங்கி 18 மாதங்களுக்குப் பிறகு, 68 நாடுகளில் இன்னும் 40% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர் என்று என்று டெட்ரோஸ் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | பலரின் வலி சிலருக்கு லாபம்: 30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR