புது தில்லி: கோவாக்ஸின் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority - NPPA) தடுப்பூசிகளை மலிவு விலையில் வழங்குவதற்கான விலையை நிர்ணயிக்கும் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.


தற்போது, தனியார் மருத்துவமனைகளில், கோவாக்சின் ஒரு டோஸ் விலை ரூ.1,200 ஆகவும், கோவிஷீல்ட் விலை ரூ.780  என்ற அளவிலும் உள்ளது. இந்த விலையில் ரூ.150 சேவைக் கட்டணமும் அடங்கும். இரண்டு தடுப்பூசிகளும் நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


ALSO READ | Omicron: Immunity அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வம் கல்லீரலை டேமேஜ் செய்யும்..!!


இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் கோவிட்-19 தொடர்பான நிபுணர் குழு, கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த, வழக்கமான சந்தை அனுமதியை வழங்கலாம் என பரிந்துரைத்தது.


விலையை பொறுத்தவரை ஒரு டோஸுக்கு ரூ. 275  என்ற அளவிலும், கூடுதல் சேவைக் கட்டணமாக ரூ. 150 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கோவிஷில்ட் தடுப்பூசிக்களை வழக்கமான சந்தையில் விற்க அனுமதி கோரி அக்டோபர் 25 அன்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு  சீரம் இன்ஸ்டிட்யூ ஆஃப் இந்தியாவின் இயக்குனர் விண்ணப்பம் அளித்திருந்தார்.


சில வாரங்களுக்கு முன்பு, பாரத் பயோடெக் நிறுவனத்தின்  இயக்குநரான வி.கிருஷ்ண மோகன், கோவாக்சினுக்கான வழக்கமான சந்தை அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ​​மருத்துவத்திற்கு முந்தைய மற்றும் மருத்துவத் தரவுகளுடன் வேதியியல், உற்பத்தி மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய முழுமையான தகவலைச் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!


Covaxin மற்றும் Covishield  தடுப்பூசுகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (EUA) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR