ஜம்மு: காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ராணுவ வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்தற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எலையில் இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை தொடங்கிள்ளது. 
 
காஷ்மீரில் உள்ள மேக்சல் செக்டாரில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது.


கடந்த அக்டோபர் 28-ம் தேதி இதேபோல் இந்திய வீரர் ஒருவரை கொன்று உடலை பாகிஸ்தான் ராணுவம் சிதைத்தது. 


எல்லையில் இந்திய ராணுவ வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்தற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று இந்திய ராணுவம் கூறியது. அதன்படி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்தற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எலையில் இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கிள்ளது.


எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்திய நிலைகளில் உள்ள ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு சரியான மற்றும் வலிமையான பதிலடியை கொடுத்து வருகிறார்கள் என்று பாதுகாப்புத் துறை பிஆர்ஒ மனிஷ் மேக்தா கூறிள்ளார். 


இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பிம்பெர், கிருஷ்ணா காதி மற்றும் நாவ்சேரா செக்டார் உள்ளிட்ட பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.


இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது, இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 
 
பாகிஸ்தானில் எந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு தொடங்கப்படுகிறதோ, அப்பகுதியை நோக்கியே இந்திய ராணுவம் தாக்குதலை நடத்துகிறது.