இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம் தோனி உறுதிப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மூலம் இதனை தோனி உறுதிப்படுத்தினார்.


உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. 1929 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராக கருதவும் என கூறியுள்ளார். ”


2007 T 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை 2011 மற்றும் 2013 ICC சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று தோனி இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துள்ளார் . இப்போது அவர் சர்வதேச கிரிகெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவர் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது 2019 ICC கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில், அதில் இந்தியா நியூசிலாந்திடம் தோற்றது. 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார்.