கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா மங்கரிவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேசின் வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர், வீட்டில் இருந்த பொருட்களை திருடி கொண்டு இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது சுரேசும், அவரது குடும்பத்தினரும் கண்விழித்தனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார். அந்த வாலிபர் தப்பி விடாமல் இருக்க சுரேஷ் தனது குடும்பத்தினருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் தகவல் கொடுத்தார். 


இதனால் அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் சுரேசின் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த அவரது 11 வயது மகளை தூக்கினார். பின்னர் அவர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து யாராவது தன்னை பிடிக்க முயன்றால் அந்த சிறுமியை கொலை செய்வதாக மிரட்டினார்.


மேலும் படிக்க | சூடான பானிபூரி குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பலி!


இதனால் யாரும் அந்த நபர் அருகே செல்லவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த வாலிபர், சிறுமியை அங்கிருந்து கடத்தி சென்றார். இந்த சம்பவம் குறித்து சிக்கோடி போலீசில் சுரேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். 


இந்த நிலையில் அந்த சிறுமியை வாலிபர் நிப்பானி அருகே கரகடா என்ற கிராமத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் அந்த சிறுமியை கடத்திய வாலிபரை கைது செய்தனர். 



விசாரணையில் அவரது பெயர் அனில் (வயது 28) என்பது தெரியவந்தது. திருட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கியதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க கத்திமுனையில் சிறுமியை கடத்தியதும் தெரிந்தது. கைதான அனில் மீது சிக்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க | தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை - பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR