ஜம்மு-காஷ்மீரில் CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயரிழந்த வீரர்களின் தியாகம் வீனாகது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 CRPF வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிக்கள் வெடிகுண்டு ஏந்திய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் பயணித்த கான்வாயில் புகுந்தது மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் 39 வீரர்கள் பலியாகினர்.


இந்த காரை ஓட்டி வந்தவன் அடில் அகமது எனவும், அவன் புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவந்துள்ளது. 2018-ஆம் ஆண்டு  ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான்.



பயங்கரவாதிகளின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க CRPF வீரர்கள் தயாராகி வருகின்றனர். 


இந்தநிலையில்,  CRPF வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும். CRPF வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இத்தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். CRPF வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது, கண்டிக்கத்தக்கது; மரணமடைந்த வீரர்களுக்கு நாடே வீரவணக்கம் செலுத்துகிறது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.