புதுடெல்லி: இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களின் வாசலில் நிற்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்களை பார்வையிட்டு அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட இடங்களில் கொடுத்து புதிய ரூ.2,000 மற்றும் ரூ.100 நோட்டுகளை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.


மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இப்பிரச்னையை நாடாளுமன்றதில் எழுப்பிய எதிர்கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.



இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏடிஎம் வாயில்களில் பணம் எடுக்க நிற்கும் பொதுமக்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் சந்தித்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 11-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பணத்தை பாராளு மன்ற வீதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய வங்கி ஒன்றில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று 4000 ரூபாய் மாற்றி சென்றார். 


நேற்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் வங்கிகளில் மக்கள் பணம் எடுக்க முடியாமல் திணறினர். இதையடுத்து இன்று திங்கட்கிழமை வங்கிகள் திறக்கப்படுவதால் பணம் எடுக்க வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.